​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Published : Oct 16, 2022 3:35 PM

"இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Oct 16, 2022 3:35 PM

இந்தி திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டுமென்று, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக்குழு, ஆங்கிலத்துக்கு பதில், இந்தியை பயன்படுத்தும்படி அறிக்கை அளித்திருப்பதாக, செய்தி வெளியாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பரிந்துரைகள் அனைத்தும், அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானவை என்றும், தேசத்தின் பன்மொழி கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும் எனவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

1968, 1976ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவும், இந்த நிலைப்பாடு நீடிக்க வேண்டுமென்றும், பிரதமரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.